என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சேலம் கொள்ளை"
சேலம் செவ்வாய்ப்பேட்டை சின்னமாறன் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 42). அரசு பள்ளி ஆசிரியையான இவர் மேட்டுப்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று காலை ராஜேஸ்வரி டிரைவிங் ஸ்கூலுக்கு சென்று விட்டார். அப்போது வீட்டின் அருகே உள்ள உறவினர் ஒருவர் ராஜேஸ்வரிக்கு போன் செய்து வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவையும் உடைத்து அதில் இருந்த 16 பவுன் நகையையும் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து ராஜேஸ்வரி செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
சேலம் கோட்டகவுண்டம் பட்டி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சசிலா (வயது 38).
இவர் நேற்றிரவு கோட்டகவுண்டம் பட்டியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடைக்கு ஜெராக்ஸ் எடுப்பதற்காக நடந்து சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் மர்ம நபர்கள் 2 பேரும் பறித்த செயினுடன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பினர். இதனால் கதறி அழுத அவர் சம்பவம் குறித்து கருப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
நேற்று முன்தினம் சேலம் ஜங்சன் புதுரோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 6 பவுன் செயின் பறித்த நிலையில் எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த செயின் பறிப்பு சம்பவம் பொது மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் போலீசார் தீவிர ரோந்து சென்று வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் சித்தனூர் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் டேனியல். இவரது மனைவி ரோஸ் (வயது 47). இவர்கள் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் சேலத்திற்கு வந்தனர்.
பின்னர் இரவு 10 மணியளவில் வீட்டிற்கு திரும்பினர். மோட்டார் சைக்கிள் சேலம் ஜங்சனை அடுத்த புது ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவர்களை வழி மறித்தனர். திடீரென அதில் ஒரு நபர் ரோஸ் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தம்பதியினர் திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டனர். ஆனால் மர்ம நபர்கள் 2 பேரும் கண்ணிமைக்கும் நேரத்தில் செயினை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரோஸ் கதறிய படியே சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் இந்த சாலையில் நடந்த இந்த செயின் பறிப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் காந்திரோடு ராமையா காலனியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 72). இவர் 4 -ரோடு பகுதியில் ஒரு வணிக வளாகத்தில் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகள் அமெரிக்காவிலும், மற்றொரு மகள் மதுரையிலும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் மகள் தனது தந்தையை பார்ப்பதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அமெரிக்காவில் இருந்து சேலம் வந்தார். தந்தை வீட்டில் ஒரு வாரகாலமாக தங்கியிருந்த அவர் நேற்று இரவு அமெரிக்கா செல்ல புறப்பட்டார்.
அப்போது ஜெயராமன் காரில் தனது மகளை அழைத்துக் கொண்டு அமெரிக்காவுக்கு வழியனுப்புவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்றார்.
பின்னர் பெங்களூருவில் இருந்து இன்று காலை ஜெயராமன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டுக்குள் இருந்த நகை, வெள்ளி, பணம் போன்றைவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.
இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு ஜெயராமன் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் 2 தளங்களிலும் பார்வையிட்டு கொள்ளையர்கள் எந்த வழியாக வந்திருப்பார்கள்? எத்தனை பேர் வந்திருப்பார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரிடம், ஜெயராமன் கூறுகையில் நான், வீட்டுக்குள் 15 கிலோ வெள்ளி, 15 பவுன் நகை, 2 லட்சம் பணம் ஆகியவை வைத்திருந்தேன். இவற்றை கொள்ளையர்கள் திருடி சென்று விட்டார்கள் என்றார்.
மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஜன்னல், கதவு, பீரோக்களில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தார்கள். துப்பறியும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்க ஏவி விடப்பட்டது. மோப்பநாய் வீடு முழுவதும் சுற்றி சுற்றி வந்தது. இந்த கொள்ளை சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Robberycase
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்